ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது
நாவலப்பிட்டியில் ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம – கல்குவாரி பிரதேசத்தின் நாவலப்பிட்டி குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 530 மில்லி கிராம் ஹெரோயின், , 430 மில்லிகிராம் கேரளா கஞ்சா ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர்கள் 25 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.