வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பினர்
வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 இலங்கையர் இன்று அதிகாலையும் நேற்றிரவும் நாடு திரும்பினர்
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 322 பேரும், கட்டாரிலிருந்து 22 பேரும் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர். ஓமானிலிருந்து 150 பேர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.