சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்

பாரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் சொத்துக்களும் பணமும் அரசுடமையாக்கப்படும். இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் போதைப்பொருள் வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளில் 320 கோடி ரூபா பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் நவீன முலோபாயங்கள் பற்றி பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்கள். கொழும்பிலும், புறநகரங்களிலும் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பான தகவல் கிடைப்போர் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!