கோட்பாட்டு பிடிவாதம் எம் சமூகத்தை அழிக்கும் – வீ. தனபாலசிங்கம்
“நாம் முன்வைக்கும் கோட்பாடுகள் சரியாக இருக்கலாம். ஆனால், கோட்பாட்டு பிடிவாதம்தான் எம் சமூகத்தை அழிக்கும். அப்படி அழிந்த சமூகங்கள் இருக்கின்றன. அதற்காக கோட்பாடுகளை கைவிடச் சொல்லவில்லை. காலத்திற்கேற்ப அந்தச் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழர் தரப்பிலே இந்தக் கோட்பாட்டு பிடிவாதத்தினால்தான் அந்த பிள்ளைகள் செய்த தியாகங்களை ஏதாவதொரு அரசியல் பயனாக இன்று அறுவடை செய்ய முடியாமல் இருக்கிறோம்.”
இது பற்றி சிந்திக்கவேண்டும் எனக் கூறுகின்றார் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், வீரகேசரி பத்திரிகையின் செய்திப் பிரிவின் ஆலோசகருமான வீரகத்தி தனபாலசிங்கம்.
தேர்தலின் பின்னரான தமிழர் அரசியல் பற்றி மாற்றம் இணையத்தளத்துடன் வீ. தனபாலசிங்கம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவை.