மக்கள் முண்ணனியின் பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்
தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது.
முண்ணனியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிவண்ணன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டார் என்று கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில், அவசரமாகக் கூடிய கட்சியின் மத்திய குழு மணிவண்ணனை நீக்குவதென முடிவெடுத்துள்ளது.
அவர் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.