ஐக்கிய தேசியக் கட்சிக்கு இளம் தலைவரே தேவை
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு சிறிகொத்தாவில் இன்று (14) முற்பகல் கூடியுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பெரும்பாலான உறுப்பினர்கள் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர் எனவும், அது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது எனவும் கட்சியால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, விரைவில் தகுதியுடைய இளம் உறுப்பினர்களுக்கு சில பொறுப்புகளை ஒப்படைத்து, அவ்விடயத்தில் அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து பொருத்தமானவரை நியமிக்கவுள்ளார் என்று அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.