யாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டன.
கொட்டகை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது மண்டையோடு, எலும்புக்கூடுகள், பெண்கள் அணியும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதி 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.