கல்வி அமைச்சின் செயலாளராக மொறட்டுவ பல்கலை துணைவேந்தர்
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசியர் கபில பெரேரா அவர்கள் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நேற்று (13) இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளராகவும் பேராசியர் கபில பெரேராவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.