புதனன்று ஜனாதிபதியின் தலைமையில் புதிய அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இடம்பெறவுள்ளது. இம்முறை பார்வையிட வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை, பாராளுமன்ற உறுப்பினர்களுடனான நெருங்கிய நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.