ஊடக அமைச்சர் கெஹெலிய கடமையைப் பொறுப்பேற்றார்

வெகுசன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல இன்று தனது கடமையைப் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் கலந்துகொண்டார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் கெஹலிய கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாட்டினுள் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற ஊடக பாரம்பரியம் கட்டியெழுப்படும்” என்றார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல பணியாற்றியிருந்தார். இறுதிப்போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், மஹிந்த அரசின் ஊடகப் பேச்சாளராகவும் கெஹலிய ரம்புக்வெல செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!