கல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்
கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கல்முனைப் பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்று கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்திக்க முற்பட்டனர். பொலிஸ்நிலை பொறுப்பதிகாரி அவர்களை எச்சரிக்கை செய்த பின்னர் திருப்பி அனுப்பினார்.
கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் காணப்படுவதுடன் ஒரே நுழைவாயிலை உத்தியோகத்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளாகத்தில் நின்ற ஒரு பாரிய மரத்தை வெட்டியமைக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்களை முதல்வர் அநாகரிக வார்த்தைகளால் திட்டியதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.