போரால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் – வியாழேந்திரன்

“போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.”

– இவ்வாறு தபால் மற்றும் வெகுஜன ஊடகத்துறை புதிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பல்வேறு தேவைகளுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்குச் சேவை செய்வதை நோக்காகக் கொண்டுள்ளேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து எனது தொழில்சார் அனுபவங்களுக்கு அப்பால் மக்களுக்குச் சேவை செய்ய முடியும்.

குறிப்பாக போரால் பாதிப்படைந்த மக்கள் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே அதிகளவு வாக்குகளால் என்னை பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்துள்ளார்கள். எனவே, மக்கள் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!