முள்ளிவாய்க்கால் மண்ணை வணங்கி கடமைகளைப் பொறுப்பேற்றார் – விக்கி
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டவருமான முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விடத்தில் வணக்கம் செலுத்தி பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார் எனவும், பங்கேற்க விரும்புவர்கள் தன்னுடன் இணைந்து அங்கு வருமாறும் அவர் ஏற்கனவே அழைப்புவிடுத்திருந்தார்.
இந்தநிலையில், இன்று முற்பகல் தனது கூட்டணிக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்ட பெருமளவான ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரன், அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சுடர் தூபியில் சுடறேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.