ஐ.தே.கவின் தலைவராக கரு?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிகளை ஏற்பது தொடர்பில் இவ்விருவரும் இன்னும் தமது நிலைப்பாடுகளைத் தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.