பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் கடந்த ஐந்தாம் திகதி தொடங்கிய முதல் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.