தேசியப் பட்டியலில் ஹரினி அமரசூரிய
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இரண்டு ஆசனங்களைப் பெற்றதுடன் தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.
தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரினி அமரசூரியவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அந்தக் கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.