கமலா ஹரீஸ் துணை ஜனாதிபதி வேட்பாளர் – ஜோபிடன் டுவிட்

நான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால், கமலா ஹரீசை துணை  ஜனாதிபதி  வேட்பாளராக நிறுத்துவேன் என ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 3- ஆம் திகதி நடக்கிது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஜோபிடன் தனது டுவிட்டரில் கூறியது, தாம் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் கமலா ஹரீஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். ஜோபிடனின் அறிவிப்பு கறுப்பர் இனத்தவர்கள் வாக்குகளை கவரவே கமலா ஹரீசை துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோபிடன் அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இது குறித்து கமலாஹாரீஸ் டுவிட்டரில் கூறியது, துணை ஜனாதிபதி வேட்பாளராக என்னை ஜோபிடன் அறிவி்த்தது எனக்குகிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன் என்றார்.

தற்போது ஜனநாயக கட்சி செனட்டராக இருக்கும், கமலா ஹரிஸ் கலிபோர்னியா அட்டர்னி ஜெனராலாகவும் இருந்தவர். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடுமையாக விமர்சித்து வருபவர்.

கலிபோர்னியாவில் இருந்து செனட்டுக்கு முதன்முறையாக 2016ல் தேர்வு செய்யப்பட்டவர் கமலா ஹரிஸ்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!