கைது செய்யப்படுவதற்கு தடை கோரி குருநாகல் மேயர் மனு

குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிடிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தொல்பொருள் மதிப்புமிக்க குருநாகல் புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக குருநாகல் நீதிவான் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்திருந்தது.

அவர்களைக் கைதுசெய்வதற்காக இதற்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்த குருநாகல் பொலிஸார் தவறியமை காரணமாக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த பிடியாணை மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, சந்தேகநபர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!