தமிழ்க் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி. தவராசா கலையரசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை தேர்தல்கள் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே. அபேசேகர, என்.ரத்னஜீவன் எச்.ஹூல் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.