புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா?

பாராளுமன்றதின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவை நியமிக்க அரச தரப்பு தீர்மானித்துள்ளது என ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்தப் பதவிக்கு நியமிக்கவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும், ஆனால் அதனை ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் நிராகரித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ள 9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு குறித்த கலந்துரையாடல்கள் கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சபாநாயகர் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் வட்டாரங்களின் மூலமாக தெரியவருகின்றது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மஹிந்த யாப்பாவை புதிய சபாநாயகராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆளும் தரப்பின் உள்ளகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!