தேசியப்பட்டியல் எம்.பிக்களின் பெயர்களை கையளிக்க காலக்கெடு

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்துக் கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பாகச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கிடைத்த பின்னர் பொதுத்தேர்தல் தேசியப் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமது கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரத்தை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தெரிவித்துள்ளன.

அதேவேளை, தேசியப்பட்டியல் எம்.பி. தொடர்பில் பல கட்சிகளில் இழுபறி நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!