வெளிநாடுகளில் சிக்கியிருந்த 176 பேர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 176 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
ஜப்பானின் நரீட்டா நகரிலிருந்து 148 பேரும், கட்டாரின் டோஹாவிலிருந்து 28 பேரும் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பதில் முகாமையாளர் தெரிவித்தார். பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.