மட்டக்களப்பில் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரா.சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்து வருகின்றனர்.
அவர் 33 ஆயிரத்து 332 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான தினம் முதல் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்து
வருகின்றார்.
களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், குருக்கள்மடம், செட்டிபாளம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற இரா. சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.