இன்று பதவியேற்கிறார் ராஜபக்ஷ

பாராளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்‌ஷ இன்று பதவியேற்கிறார். மகிந்த ராஜபக்‌ஷவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் அபார வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து உள்ளது.

இதையடுத்து, கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, ராஜம்பா விகாரையில். ராஜபக்‌ஷ பதவி ஏற்கிறார். அவருக்கு, இலங்கை ஜனாதிபதியும், அவரது சகோதரருமான கோத்தபயா ராஜபக்‌ஷ, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. மகிந்த ராஜபக்‌ஷ, இலங்கை பிரதமராக பதவியேற்பது, இது, நான்காவது முறை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!