அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் புதிய பாராளுமன்றத்தில் தீர்க்கப்படும் – பீரிஸ்

  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பெறப்பட்ட அமோக வெற்றிக்குப்பின்னர்  நேற்று (07) நடைபெற்ற முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்ததுடன் , நாட்டுக்கு இடையூறாகவுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகளை புதிய பாராளுமன்றத்தில் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதியுடன் இணைந்து சிறந்த முறையில் பணியாற்றக் கூடிய பாராளுமன்றத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதினால், சௌபாக்கிய தொலை நோக்கு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வெற்றிக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மகத்தான பணியாற்றியதாக ஜி.எல்.பீரி;ஸ் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைந்து மகத்தான வெற்றியின் பங்களார்களாகிய சகலருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நன்றிகளை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!