தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் பிரபலங்கள்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/08/ranil06-232100_Chrome.jpg)
பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் பலர் தமது தோல்வியடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, உப தலைவர் ரவி கருணாநாயக்க, ஜேவிபியின் சுனில் ஹந்துன்நெத்தி, கொழும்பில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவில் பதுளையில் போட்டியிட்ட ஓஷாடி ஹேவமத்தும, உதித் லொக்குபண்டார, நுவரெலியாவில் நவீன் திசாநாயக்க, கே.கே பியதாச ஆகியோர் வெற்றி பெறவில்லை.
யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியின் மாவை சேனாதிராஜா, சரவணபவான், வன்னியில் சிவசக்தி ஆனந்தன், மட்டக்களப்பில் ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமீர் அலி ஆகியோரும் தமது முன்னைய பாராளுமன்ற உறுப்பை தக்க வைக்கமுடியாது தோல்வி கண்டுள்ளனர்.