திருகோணமலையில் சம்பந்தன் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அதன் தலைவர் இரா.சம்பந்தன் 21 ஆயிரத்து 422 விருப்பு வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.

  ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தெரிவான எஸ்.எம் தௌபீக் 43 ஆயிரத்து 759 வாக்குகளைப் பெற்று முதலாம் இடத்திலும், இம்ரான் மஹ்ரூப் 39 ஆயிரத்து 29 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தெரிவான கபில நுவன் அத்துகோரல 30 ஆயிரத்து 56 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!