வன்னியில் ரிஷாத்துக்கு அதிக விருப்பு வாக்குகள்

 
வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு  பாராளுமன்றத்துக்குத்  தெரிவாகியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு 28 ஆயிரத்து 203 வாக்குகள் கிடைத்துள்ளன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான சார்ள்ஸ் நிர்மலநாதன் 25 ஆயிரத்து 668 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் தெரிவான ஏனைய உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் 18 ஆயிரத்து 563 வாக்குகளையும், எஸ்.வினோநோகராதலிங்கம் 15 ஆயிரத்து 190 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தெரிவான காதர் மஸ்தான் 13 ஆயிரத்து 454 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவான குலசிங்கம் திலீபன் 3 ஆயிரத்து 203 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!