பிள்ளையான் விருப்பு வாக்குகளில் முதலிடம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் 54 ஆயிரத்து 198 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவான இரா.சாணக்கியன் 33 ஆயிரத்து 332 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கூட்டமைப்பின் சார்பில் தெரிவான மற்றைய உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் 26 ஆயிரத்து 382 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தெரிவான ச.வியாழேந்திரன் 22 ஆயிரத்து 218 வாக்குகளையும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவான நஸீர் அஹமட் 17 ஆயிரத்து 599 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.