பதுளையில் செந்தில் தொண்டமான் தோல்வி
பதுளை மாவட்டத்தில் கடந்த முறை மாதிரி இம்முறையும் இரு தமிழர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் (49,762), அ.அரவிந்குமார் (45,491) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் முதன்முதலாகப் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.