மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, காங்கேசந்துறை முதல் மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 – 70 முதல் கிலோமீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள கடலில்   மீன்பிடி நடவடிக்கைகள் ஆபத்தானது எனவும், இது தொடர்பாக கடல் தொழிலில் ஈடுபடுவோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பிரதேசங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். பேருவளை முதல் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்கரை பிரதேசங்களில் கடல் அலை 2 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயர்வடையக்கூடும். கடல் அலை நிலப்பிரதேசத்தை நோக்கி வரும் வாய்ப்புள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!