எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா

பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்பி பாலசுப்பிரமணியம். அதில் தனக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கடந்த 3 நாட்களாக இருந்ததாக கூறியுள்ளார். மருத்துவமனையிலும் மைல்ட் கொரோனா என உறுதிப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ளேன் மேலும் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். இங்கு என்னுடைய நண்பர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனையிலும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். கவலைப்பட வேண்டாம் நான் நல்ல உடல் நலத்தோடு நலமாக இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிவிடுவேன். யாரும் என்னுடைய உடல் நிலையை பற்றி கவலைப்பட வேண்டாம்.

என்னுடைய உடல் நிலை குறித்து விசாரிக்க தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!