பெரிய வன்முறைகள் இல்லாத தேர்தல்
இலங்கை வரலாற்றில் பெரியளவில் வன்முfறைச்சம்பவங்கள் எதுவும் பதிவாகாத தேர்தலாக இந்தத்தேர்தல் பதிவாகியுள்ளதாக தேர்தல் விடயங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித படுகொலைகள், தீவைப்பு சம்பவங்கள், பாரதூரமான தாக்குதல்கள் உள்ளிட்ட எந்தவித பாரதூரமான வன்முறை சம்பவங்களும் இதுவரை பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கடந்த 2ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிரசாரங்கள் அற்ற அமைதி காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதி காலத்திலும் பாரதூரமான வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் கூட சுமார் 69,000திற்கும் அதிகமான பொலிஸார் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.