வியாழன் நள்ளிரவுக்குள் முடிவு – தேர்தல் ஆணையாளர்

இலங்கையில் இன்று நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் இறுதிப் பெறுபேறு நாளை வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும். என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். விருப்பு வாக்கு பெறுபேறுகளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று  தேர்தல் ஆனையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.



காலியில் நேற்று ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“கம்பஹா மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்குகே கூடுதலான நேரம் தேவைப்படும். வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் விரைவாக எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் நடைபெறும் போது பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை. குழப்பநிலை ஏற்படக்கூடிய வாக்களிப்பு பிரதேசங்களில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கலகங்களை அடக்கும் படைப்பிரிவினர் தேவையில்லை. அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. இருப்பினும் நாம் அதற்குத் தயாராகவுள்ளோம். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடியதாக இருக்கும். விருப்பு வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை 7ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி தேர்தல் தொடர்பான முழுமையான வர்ததமானியை வெளியிடக்கூடியதாக இருக்கும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!