பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் சுகாதார அதிகாரிகள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் எட்டாயிரம் சுகாதார அதிகாரிகள் கடமையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.. பொலிஸார், சிறப்பு பொலிஸ் படை, புலானாய்வுத்துறை உட்பட பாதுகாப்பு பணியில் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட இருக்கிறார்கள். தற்போது கொரோன வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொலிஸாருடன் இணைந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
தனிமைப்படுத்தி கொண்டவர்கள் மாலை 4 மணியில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் வாக்கு மையத்தில் கூட்டம் அதிக அளவில் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம் என்று சுகாதாரத்துறை பொது செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாளை காலை 7 மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கை வழிகாட்டுதல் நெறிமுறை அடிப்படையில் நடைபெறும்.
வாக்களிக்க வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பிற்கு ராணுவம் அழைக்கப்படாது என்று தேர்தல் ஆனையாளர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் நடைபெற இருந்தது. கொரோனா அப்போது உச்சத்தில் இருந்ததால் ஜூன் 20-ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு ஐந்தாம் திகதிக்கு மாற்றப்பட்டது.