ஐ.தே.கவின் காரியாலயம் மீது தாக்குதல்
கிருலப்பனையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் காரியாலயத்தின் மீது, இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், காரியாலயத்திலிருந்த உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
அந்தத் தாக்குதலில், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் டைட்டஸ் பெரேராவும் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அத்துடன், சேதமாக்கப்பட்ட காரியாலயத்தையும் பார்வையிட்டார்
தேர்தல் அமைதிக் காலத்திலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தெரிவித்தார்.