வெளிநாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 373 இலங்கையர் நாடு திரும்பினர்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்குத் தொழில் வாய்ப்புக்காகப் புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 332 பேரும், பிரிட்டனுக்குத் தொழில் வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றிருந்த 41 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள வர்த்தகக் கப்பலில் பணியாற்றுவதற்காக,  வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 13 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹா நகரிலிருந்து அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்ததும், பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!