சீன முன்னணி வீராங்கனை விலகல்

அமெரிக்க  ஓபன் டெனிஸ் போட்டியில் பங்கேற்பதில் இருந்துந் சீன முன்னணி வீராங்கனையான வாங் குவாங் விலகியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 31-ஆம் திகதி முதல் செப்டம்பர் 13-ஆம் திகதி வரை நியூயார்க் நகரில் நடக்கிறது. ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடைபெறும் இந்த போட்டியில் இருந்து சீனாவின்  முன்னணி  வீராங்கனை வாங் குவாங் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முறை சின்சினாட்டி மற்றும் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்துள்ள அவர் அடுத்த சீசனில் இந்த போட்டியில் விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 28 வயதான வாங் குவாங் உலக தரவரிசையில் 29-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!