140,000 டொலர் உட்பட பல கோடி ரூபாவுடன் ஒருவர் கைது
தெமட்டகொடையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர், 3 கோடி 13 இலட்சம் இலங்கை பணம், நான்கு கிராம் ஹெரோயின் ஆகியவற்றுடன் நேற்று இரவு 10 மணிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு வடக்கு – வீதித்தடை பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தெமட்டகொடையில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. அப்போது டொலர், இலங்கை பணம், ஹெரோயின் ஆகியவற்றுடன் அப்பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் கொழும்புத் துறைமுகப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்