சீன ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் கைது

சீன ராணுவத்துடன் தொடர்பில் இருந்ததை மறைத்து, விசா பெற்றதாக கூறி, சீன ஆராய்ச்சியாளர் ஒருவரை அமெரிக்கப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த ஜுவான் டாங் (வயது 37) என்ற சீன ஆராய்ச்சியாளர் உட்பட நான்கு ஆராய்ச்சியாளர்கள் விசா முறைகேடு செய்துள்ளது தெரிய வந்தது. அவர்கள் சீன ராணுவத்தில் அங்கம் வகித்ததை மறைத்து விசா பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் டாங்கை தவிர மற்ற மூவரை பொலிஸார் கைது செய்தனர்.

டாங் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன துாதரகத்தில் தஞ்சமடைந்தார். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட டாங் மருத்துவ உதவி தேவைப்படவே துாதரகத்தில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து 23ம் திக‌தி பொலிஸார் அவரையும் கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!