கூடவே இருந்து முதுகில் குத்தும் துரோகக் கும்பல் – மனோ கணேசன்

“கூடவே இருந்து முதுகில் குத்தும் இந்தத் துரோகக் கும்பல் எது? யாரெனத் தெரிகின்றதா??

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தனது பேஸ்புக் பதிவொன்றில் இன்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“என்னை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அவதூறு செய்கின்றார்கள்!

இப்போ காசுக்கு விலை போகின்ற ஒரு ஜந்துவை அரச தொலைகாட்சியிலே காசு கொடுத்து பேச வைத்து, அதைக் காணொளியாகச் செய்து, போலி முகநூல் மூலம், பணம் செலுத்தி அவதூறு பரப்புகின்றார்கள்.

தலைநகர் தமிழ் சமூகம் மத்தியில் பிரதேசவாதத்தையும் கிளப்பி, அதிலேயும் குளிர்காய முனைகின்றார்கள். கூடவே இருந்து முதுகில் குத்தும் இந்தத் துரோகக் கும்பல் எது? யாரெனத் தெரிகின்றதா?” –  எனக் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!