சிறைக்குள் கஞ்சா, புகையிலை வீசியவர் கைது

பொலனறுவைச் சிறைச்சாலைக்குள் கஞ்சா, புகையிலை ஆகியவற்றை வீசிய குற்றச்சாட்டில்  பொலனறுவையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் வீசப்பட்ட கஞ்சாவும், புகையிலையும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரைப் பொலனறுவை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!