சஜித் அணியின் ஆதரவாளர்களை வெளியேற்றியது ஐ.தே.க

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மேலும் 37 உறுப்பினர்களின் கட்சி உறுப்பிரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நீக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்த உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

54 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , 61 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலாக 115 பேரை சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!