22 ஆண்டுகளுக்குப் பின் நடராஜர் சிலை ஒப்படைப்பு

ராஜஸ்தானில், 22 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு, பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட, 9ம் நுாற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள காடேஷ்வர் கோவிலில் 1998ம் ஆண்டு நடராஜரின் கற்சிலை ஒன்று திருட்டு போனது. நான்கு அடி உயரமுள்ள அந்த சிலை 9ம் நுாற்றாண்டை சேர்ந்தது. காணாமல் போன அந்த சிலையை தேடும் பணியில் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த சிலை பிரிட்டனுக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் லண்டனில் வசிக்கும் சிலை சேகரிப்பாளர் ஒருவரிடம்ந் அந்த சிலை விற்கப்பட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, 2005இல் அவரிடம் இருந்து அந்த சிலையை மீட்ட இந்திய அதிகாரிகள் அதை பிரிட்டனில் உள்ள இந்திய துாதரகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கே, பிரதான மண்டபத்தில் அந்த சிலை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலையை ஆய்வு செய்ததில் காடேஷ்வர் கோவிலில் திருடப்பட்டது என்பதை உறுதிபடுத்தினர். இந்நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின், அந்த நடராஜர் சிலையை அதிகாரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிலை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!