ராணி எலிசபெத் வாழ்ந்த மாளிகை அருங்காட்சியகமாகிறது
பிரிட்டன் ராணி எலிசபெத், மால்டா தீவில் சுமார் 3 ஆண்டுகள் வசித்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் ராணி எலிசபெத், 1949ம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரை மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவில் உள்ள மாளிகையில் வசித்தார். திருமணமான புதிதில் தன் கணவர் பிலிப்புடன் அவர் வாழ்ந்த இந்த மாளிகை, அவர் சென்றபின் பராமரிப்பின்றி இருந்தது. இந்த மாளிகையை சுமார் 44 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள மால்டா அரசு, அதனை 88 கோடி ரூபாய் செலவில் புணரமைக்க உள்ளது.
புணரமைக்கப்பட்ட பின் இந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற மால்டா அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த முடிவை மால்டா அரசு எடுத்துள்ளது.