இலங்கையில் இருந்து பயணித்த இந்திய மாலுமிக்குக் கொரோனா
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/06/corona.jpeg)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர் இந்திய மாலுமி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாலுமிகள் உட்பட 65 பேர் வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் கப்பல்களில் சேவை செய்பவர்களாவர். அவர்களில் 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகக் கட்டாருக்குச் சென்றனர்.
அவ்வாறு சென்ற 15 பேரில் ஒருவருக்குக் கொரோனா தொற்றியுள்ளதாக டோஹாவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அதற்கமைய அவர் அந்த நாட்டுக்குச் சென்ற விமானத்திலேயே இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த இந்திய மாலுமி தற்போது கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.