சமஷ்டி தீர்வு கேட்டால் சிறைதான் வாழ்க்கை – விமல் வீரவன்ச

”’சமஷ்டி’, ‘சமஷ்டி’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கூக்குரல் இட்டால் அவர்களுக்குச் சிறைதான் வாழ்க்கை.” என்கிறார் விமல் வீரவன்ச.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:-

“சமஷ்டி, சமஷ்டி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கூக்குரல் இட்டால் அவர்களுக்குச் சிறைதான் வாழ்க்கை. அதுதான் அவர்களுக்கான எமது மிகப்பெரிய பரிசாகும். எனவே, கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடும்போதே மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

சர்வதேசப் பலம் இருக்கின்றது என்ற நப்பாசையில் அரசும் சிங்கள மக்களும் விரும்பாத சமஷ்டி தீர்வைக் கூட்டமைப்பினர் திரும்பத் திரும்பக் கோருவதால்  எவ்வித நன்மையையும் அவர்கள் பெற முடியாது.
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கினார்கள். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிலும் இதற்கான மக்கள் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மீண்டும் கிடைக்கும். எனவே, மக்கள் ஆணையை எவரும் மீறவே முடியாது” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!