சஜித்தின் தலைமையில் ஆட்சி மலர்வது நிச்சயம் – ஹக்கீம்
“நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலர்வது உறுதி.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“எமது கட்சியின் வேட்பாளர்கள் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுடன் ஒன்றுபட்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். எனவே, கடந்த காலங்களில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.
இந்த முயற்சியில் எவ்விதமான இனவாத அரசியல் சக்திகளோ இனவாத கொள்கைகளோ இல்லை. இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு எமது சிவில் சமூகத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் வேறுபாடுகளை மறந்து விட்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்” – என்றார்.