ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த 115 உறுப்பினர்கள் வெளியேற்றம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சி உறுப்பினர்கள் 115 பேரை கட்சி உறுப்புரிமையிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்றது.

இதன்போதே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் 54 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், பரப்புரைக்கு ஒத்துழைப்பு வழங்கும் 61 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் நீக்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!