போதை வில்லைகளுடன் இருவர் கைது
கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலுக்கு அருகில் 2.4 கிராம் ஹெரோயின் மற்றும் 5 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 1.50 மணியளவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இச்சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களை புறக்கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர்.